கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும், இந்த அரசாங்கம், மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவர் மீதும் கை வைக்காது என்று நாடாளுமன்ற
உறுப்பினர் சாமர சமப்த் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (10) அவர் இதனைகள் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை – பெரகல தடுப்பு முகாம்
“பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே பிடிப்பீர்கள்”
அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் தாம்
மட்டுமே என்று நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க கூறியுள்ளார் .
1987 ஆம் ஆண்டுகளில் பதுளை – பெரகல தடுப்பு முகாம் மிகவும் ஆபத்தானதாக
செயற்பட்டது.
இருப்பினும் அரசாங்கம் பட்டலந்தவை மட்டுமே தொடர்ந்து கூறி வருகிறது என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
