Home இலங்கை பொருளாதாரம் ஒரு மாதத்தில் ட்ரில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ள அநுர அரசு

ஒரு மாதத்தில் ட்ரில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ள அநுர அரசு

0

இலங்கை அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த கடனை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தரவுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கடந்த பெப்ரவரி மாதத்தில் 750 பில்லியன் ரூபாவை அரசாங்கம் கடனாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திறைசேரி உண்டியல்கள்

இந்த மாதத்தின் கடந்த 14 நாட்களில் அரசாங்கம் 580 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதன்படி திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த வருடத்தில் இதுவரை 2.3 ட்ரில்லியன் ரூபாவினை கடனாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை அரசாங்கம் அதன் செயற்பாடுகளை பராமரிப்பதற்கு 2025 ஜனவரியில் 700 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக கடன் வாங்கியதாக ஐ.எம்.எப் கட்டுரையாளர் தலால் ரஃபி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து (Colombo) கட்டுநாயக்கா (Katunayake) வரையிலான 8 நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பதற்கான செலவோடு இந்த தொகையை ஒப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version