Home இலங்கை அரசியல் நீதிபதி இளஞ்செழியனை புறக்கணித்த அநுர : சாடும் தமிழ் எம்.பி

நீதிபதி இளஞ்செழியனை புறக்கணித்த அநுர : சாடும் தமிழ் எம்.பி

0

இலங்கையின் தற்போதைய அரசாங்கமும் தமிழர் தரப்பிலே சில தவறுகளை விடுகின்ற வாய்ப்புக்களை உருவாக்குகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (09) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “உதாரணமாக சொல்லப்போனால் நீதிபதி இளஞ்செழியனை (Illancheliyan) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு அவருக்கு சகல தகமைகளும் இருந்தது.

ஆனால் அவர் ஓய்வு பெற்றுள்ளார் என்ற காரணத்தை கூறி ஜனாதிபதி அநுர அவரைப் புறக்கணித்துள்ளார்.

அந்தக் காலத்தில் அவர் ஓய்வு பெறவில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்திச் சொல்ல முடியும். இளஞ்செழியன் ஒரு தமிழன் என்ற ரீதியில் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எனவே, இளஞ்செழியனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆக்குவதற்கு விட்ட தவறை ஜனாதிபதி பொறுப்பு எடுக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/TPfbR_yscaA

NO COMMENTS

Exit mobile version