Home இலங்கை அரசியல் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தால் கிடுக்கிப்பிடியில் அநுர

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தால் கிடுக்கிப்பிடியில் அநுர

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மீறினால் அது இலங்கைக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த அரசாங்கங்களிலிருந்து தற்போதைய அரசாங்கம் வரை தம்மை இந்தியாவிற்கு ஆதரவான தரப்பாக காட்டி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை.

எனினும், ஆட்சியமைத்த அரசாங்கங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஒருபோதும் இரத்து செய்ததில்லை என்பதோடு தற்போதைய அரசாங்கமும் அதையே தொடரும் என எதிர்ப்பார்ப்படுவதாக அமிர்தலிங்கம் கூறியுள்ளார்.

அத்துடன், இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக அநுர அரசாங்கம் செயற்படுமாக இருந்தால் அது இந்தியா உடனான மோதலுக்கு வழி வகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version