வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் எம்பிக்கள் அநுரவை பிரதிபலிக்கவில்லை, இதனால் அநுர குமாரவின் செல்வாக்கு குறைவடைந்துள்ளது என்று
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“ஊழலை ஒழிப்பது மற்றும் அரசாட்சியல்ல, ஆனாலும் அநுர அரசாங்கத்திற்கு அவகாசம் தருவதற்கு தயாராகவும் இருக்கின்றோம்.
அநுர அலையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த எம்பிக்களும் அவரின் கொள்ளைகளை பிரதிபலிப்பதாக தெரியவில்லை.
அநுர என்ன கூறினார், என்ன வாக்குறுதி தந்தார் என்பதை அறியாமல்தான் அவர்கள் இருக்கின்றார்கள்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்புநிகழ்ச்சி….
