ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2025 ஜூன் 10 ஆம் திகதியன்று, ஜெர்மனிக்கு
அதிகாரப்பூர்வ அரசு முறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கொழும்பில் இன்று(23) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது, வெளியுறவு அமைச்சர் விஜித
ஹேரத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசுமுறை பயணம்
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி திசாநாயக்க, ஜெர்மன் ஜனாதிபதியைச் சந்திப்பார்.
அத்துடன், இலங்கைக்கு வருகை தரும் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை
அதிகரிக்கத் தேவையான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள்
நடத்தப்படும் என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
