Home இலங்கை அரசியல் மொட்டுடன் இணைந்து கபட அரசியலுக்கு உயிர்ப்பூட்ட முயற்சிக்கும் ரணில்: அனுரகுமார குற்றச்சாட்டு

மொட்டுடன் இணைந்து கபட அரசியலுக்கு உயிர்ப்பூட்ட முயற்சிக்கும் ரணில்: அனுரகுமார குற்றச்சாட்டு

0

மொட்டு கட்சியின் சிலருடன் இணைந்து ரணில் வழமையான கபட அரசியலுக்கு உயிர்ப்பூட்ட முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மீண்டும் அதிபராக வேண்டும் என நினைப்பவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை கண்டியில் (Kandy) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கடன் பிரச்சினை

இந்தநிலையில், கடன் பிரச்சினையிலிருந்து நாடு மீட்டெடுக்கப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க கூறிய போதிலும் உண்மை அதுவல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க வருமானம் மற்றும் அந்நிய செலாவணியை அதிகரித்துக்கொள்வதே இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும்,  ரணில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரச வருமானத்தை அதிகரிக்கவும் மற்றும் அந்நிய செலாவணியை அதிகரிக்கவும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version