Home இலங்கை அரசியல் அநுர நிர்வாகத்துக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் தீவிரமடையும் விரிசல்

அநுர நிர்வாகத்துக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இடையில் தீவிரமடையும் விரிசல்

0

வழக்கு ஒன்றில் இருந்து மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக, சட்டமா
அதிபரின் அண்மைய பரிந்துரை தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்கள சட்ட
அதிகாரிகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மதிப்புமிக்க சுயாதீன தொழில்முறை மரபுகளுக்கு
ஏற்ப, இந்த பரிந்துரை செய்யயப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள்
சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவதற்கான எந்தவொரு
முயற்சிக்கு எதிராகவும் அவரைப் பாதுகாக்கவும் தயங்கப்போவதில்லை என்று
சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின், சட்ட
அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எச்சரிக்கை

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் பதில் செயலாளர் தஸ்யா கஜநாயக்க
இந்த எச்சரிக்கையை அறிக்கை ஒன்றின் மூலம் விடுத்துள்ளார்.

அரசியல் விளைவுகள் அல்லது பொது ஒப்புதல் அல்லது மறுப்பு ஆகியவற்றைப்
புறக்கணித்து, கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், குற்றப்பத்திரிகைகளை
அனுப்புவதற்கும் சந்தேக நபர்களை விடுவிப்பதற்கும் முடிவுகளை எடுப்பது, ஒரு
சுயாதீன சட்டமா அதிபரின் தனிச்சிறப்பாகும்.

இதனையே சட்டமா அதிபர் செய்துமுடித்துள்ளார்.

எனவே, சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவதற்கான எந்தவொரு முயற்சியையும்
எதிர்த்து நின்று தோற்கடிக்க சட்ட அதிகாரிகள் சங்கம் தயங்காது என்று சட்டமா
அதிபர் திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் பதில் செயலாளர் தஸ்யா கஜநாயக்க
குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version