Home இலங்கை அரசியல் இன மத பேதமில்லாமல் சேவையாற்றும் சந்தர்ப்பம்: ஆளும் தரப்பு எம்.பி கருத்து

இன மத பேதமில்லாமல் சேவையாற்றும் சந்தர்ப்பம்: ஆளும் தரப்பு எம்.பி கருத்து

0

கடந்த காலங்களைப் போல் அல்லாமல் தற்போது இன மத பேதமில்லாமல் சேவையாற்ற கூடிய
ஒரு சந்தர்ப்பம் புதிய அரசாங்கத்தினால் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.நழீம்
தெரிவித்துள்ளார்.
 

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று(12.02.2025) இடம்பெற்ற
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வஸ்ம கொடுப்பனவு திட்டத்தில்
சில குறைபாடுகள் நிறைந்தே காணப்பட்டன.

நிலைபேறான திட்டம்

சரியான தரவுகள் மூலம் பயனாளிகள் தெரிவு
செய்யப்படாததால் அரச ஊழியர்கள் இன்றும் பொது மக்களினால் குறை கூறப்படுவது
தவிர்க்கப்பட்டு எதிர்வரும் காலங்களில் இத்திட்டமானது ஒழுங்குபடுத்தப்பட்ட
திட்டத்தின் கீழ் வந்தால் மட்டுமே இது நிலைபேறான திட்டமாக அமையும்.

இத்திட்டத்தின் ஊடாக கொண்டுவரப்படும் உற்பத்தி பொருட்களுக்குரிய முறையான சந்தை
வாய்ப்பினை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இத்துறை சார்ந்த
நிபுணர்களின் அறிவுரையை பெற்று இதனை முன்னெடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version