Home இலங்கை அரசியல் அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பும் நினைவில்லம் அங்குரார்ப்பணமும்

அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பும் நினைவில்லம் அங்குரார்ப்பணமும்

0

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை
திறப்பும், அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி நினைவில்லம் அங்குரார்ப்பண நிகழ்வும்
இன்று(12) மூளாயில் உள்ள அவது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் ஏற்பாட்டில், நாடாளுமன்ற முன்னாள்
உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது.

நினைவு இல்லம்

அவரது புதல்வர் Dr.அமிர்தலிங்கம் பகீரதன் வரவேற்புரையினை நிகழ்த்தினார்.

வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் உருவச் சிலையனை
வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்  திறந்து வைத்துள்ளார்.

அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி நினைவு இல்லத்தினை இந்திய துணைத் தூதர் சாய்
முரளி திரை நீக்கம் செய்த வைத்துள்ளார்.

இந்த நினைவில்லத்தில் முன்னாள்
எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் பயன்படுத்திய பொருட்கள் அவரது
அரசியல் வரலாற்று பயணத்தினை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் என்பன
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் உட்பட அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version