Home இலங்கை அரசியல் ஜனாதிபதியின் வியக்க வைக்கும் செயல் தொடர்பில் வெளியான காணொளி

ஜனாதிபதியின் வியக்க வைக்கும் செயல் தொடர்பில் வெளியான காணொளி

0

எழில்கொஞ்சும் மலையகத்தின் தென்றல் காற்றினை ரசித்தபடி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உற்சாகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபடும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு 2025.10.12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

 அநுரகுமார திசாநாயக்க

இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு இங்கு வீட்டு உரிமைகள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வுக்காக சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கட்டைக் காற்சட்டையுடன் நடைப்பயிற்சியில் ஈடுபடும் காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.

உற்சாகமாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையத்துக்கும் விஜயம் செய்திருந்தார் அங்கிருந்த பொதுமக்களுடன் சுமுகமான உரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version