அரகலய போராட்டத்தை மக்கள் எழுச்சியாக எவ்வாறு மாற்றினார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்தமையால் தங்கள் அரசுக்கு எதிராக அவ்வாறு நடக்காதிருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அநுர(Anura Kumara Dissanaye) அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளது என
பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்தாலும், படையினரை குறைப்பதிலும், அவர்களுக்கான செலவுகளையும் அரசாங்கம் எப்பொழுதும் விட்டுக்கொடுத்தில்லை.
எல்லா தேர்தல்களிலும், வெற்றிப்பெற்று தமக்கான அரசியல் பலத்தை உருவாக்குதே தற்போதைய அநுர அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.
இது தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு…