Home இலங்கை அரசியல் டெல்லியில் ஏற்பட்ட சோகம்.. அநுர வெளியிட்ட செய்தி!

டெல்லியில் ஏற்பட்ட சோகம்.. அநுர வெளியிட்ட செய்தி!

0

டெல்லியில் நேற்றையதினம் (10.11.2025) இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை இட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்திய மக்களுடன் இலங்கை ஒற்றுமையுடன் நிற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள சுதந்திரச் சின்னமான செங்கோட்டை அருகே பயணித்த கார் ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இதன்போது குறைந்த 10 பேர் கொல்லப்பட்டதோடு 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், குறித்த காரை ஓட்டியது மருத்துவர் முகமது உமர் என்ற பயங்கரவாதி என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறிருக்க, இந்த சம்பவம் தொடர்பில் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் டெல்லி பொலிஸார் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version