Home இலங்கை அரசியல் யாழில் வெடித்த சர்ச்சை – ரணிலுக்கு தக்க பதில் வழங்கிய சுமந்திரன்: அநுர புகழாரம்

யாழில் வெடித்த சர்ச்சை – ரணிலுக்கு தக்க பதில் வழங்கிய சுமந்திரன்: அநுர புகழாரம்

0

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) , அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, ​​வடக்கு மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தனது கருத்து தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டை அநுர குமார நிராகரித்ததோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) ஏற்கனவே சரியான பதிலை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்கனவே சரியான பதிலை வழங்கியிருப்பதால் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) தாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனவே இனவாதத்தை தூண்ட முயற்சித்ததற்காக ரணில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என அநுர குமார வலியுறுத்தியுள்ளார்.

சுமந்திரனின் கருத்து

இதற்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க வடக்கு மக்களை அச்சுறுத்துவதாகக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதனை தொடர்ந்து, அநுரவை ஆதரிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அநுரவின் இந்த கருத்துக்கள் இனவாத உள்நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை என்றும், நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதில் அவர் அர்ப்பணிப்புடன் இருப்பதை தாம் அறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Source: https://ibctamil.com/article/anura-kumara-jaffna-response-to-controversy-1725786644

NO COMMENTS

Exit mobile version