Home இலங்கை அரசியல் நாட்டை கட்டியெழுப்ப இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்: அனுரகுமார தெரிவிப்பு

நாட்டை கட்டியெழுப்ப இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும்: அனுரகுமார தெரிவிப்பு

0

Courtesy: Ashraf

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க
வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakka) தெரிவித்துள்ளார். 

அம்பாறை மாவட்ட கரையோர வர்த்தகர்களுடன் காரைதீவில் நேற்று (12.07.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“எங்களது நாடானது பொருளாதாரத்தில் ஒதுக்கப்பட்ட வீழ்ச்சி அடைந்த நாடாக
இருக்கின்றது.

தேசிய ஒற்றுமை

வாங்கிய கடனை செலுத்த முடியாத ஒரு நாடாக நாங்கள் இருக்கிறோம்.
தொழில் வல்லுனர்களுக்கு இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய ஒரு நிலை
ஏற்பட்டிருக்கின்றது.

இந்த நாட்டை கட்டி எழுப்ப வேண்டும் என்றால் நாங்கள் இனவாதத்தை தோற்கடிக்க
வேண்டும். தேசிய ஒற்றுமையை நாங்கள் உருவாக்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் ஏன்
இனவாதத்தை கொண்டு வருகிறார்கள்? எங்கள் எல்லோருக்கும் தெரியும் அவர்களுக்கு
பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாதவிடத்து, பிள்ளைகளுக்கு
தொழில் ஒன்றை வழங்க முடியாதவிடத்து, கடற்றொழிலாளர் சமூகத்தினுடைய பிரச்சினையை தீர்க்க
முடியாவிட்டால் அவர்கள் இனவாதத்தை கட்டவிழ்த்து விடுவார்கள்.

நாட்டு மக்கள் 

இந்த
இனவாதத்தின் ஊடாக சிங்கள மக்களை மூளை சலவை செய்து, சிங்கள மக்களுக்காக ஒரு
அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று சொல்வார்கள்.

ஆகையால் இந்த நாட்டை சிறப்பாக கட்டி எழுப்புவதற்கு நாங்கள் என்ன செய்ய
வேண்டும். தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.

தேசிய ஒற்றுமையை
யாருக்கு உருவாக்கலாம்? சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஒற்றுமை தேவை
இல்லையா ?
தேசிய ஒற்றுமை தேவை இல்லையா ?

அதற்காகவே நாங்கள் முயற்சி செய்கிறோம். அது தேவை
இல்லை என்றால் வேறு கட்சிகளை நீங்கள் தேர்ந்தெடுங்கள்“ என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version