Home இலங்கை அரசியல் முதல் வெளிநாட்டு பயணம் : இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி அநுர

முதல் வெளிநாட்டு பயணம் : இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி அநுர

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக புதிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.

இன்று(18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கு முதல் பயணம்

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, ​​இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன்(narendra modi) கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் தேசத்தை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை நகர்கிறது என்பதை உலகிற்கு எடுத்துரைக்க உத்தேசித்துள்ளதாகவும், அதன் பிரஜைகளுக்கு நிலையான மற்றும் அழகான நாட்டை உறுதி செய்யும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைய காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa),மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena),கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) ஆகியோர் முதலில் இந்தியாவிற்கே தமது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று இலங்கைக்கு இடர் நேர்ந்தபோதெல்லாம் ஓடோடிவந்து முதலில் உதவி செய்வதும் இந்தியாதான்.

அநுரவும் அதே வழி

அந்த வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மன்னாரில் அமைக்கப்படவிருந்த அதானியின் காற்றாலை மின்திட்டம் அநுர அரசில் மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவரது இந்திய விஜயத்தின்போது இந்த விடயம் கலந்துரையாடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version