Home இலங்கை அரசியல் அமெரிக்காவிடம் இலங்கை ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

அமெரிக்காவிடம் இலங்கை ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அண்மையில் விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகள் தொடர்பில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்தக் கடிதம் கிடைத்ததை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வரி குறைப்பு

வரியினால் ஏற்பட கூடிய தாக்கத்தை குறைப்பதற்கு இலங்கை எடுக்கக்கூடிய சாத்தியமான வழிகளை ஜனாதிபதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீர்வை வரியை குறைப்பதற்கு ஒத்துழைப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி கடிதத்தில் கோரியதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version