ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நள்ளிரவை அண்மித்த நேரத்தில் திடீரென்று கண்டிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் காட்சிப்படுத்தப்படும் புனித தந்த தாதுவைப் பார்வையிட வரும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக பெரும் இன்னல்களைச் சந்தித்திருந்தனர்.
அத்துடன் கண்டி மாநகரம் மாபெரும் சுகாதாரக் கேட்டையும் எதிர்கொண்டு, நகரின் அழகுத் தோற்றம், சுற்றாடல் என்பன பாதிக்கப்பட்டிருந்தன.
திடீர் விஜயம்
இவற்றை சீர்செய்யும் வகையிலும், யாத்திரிகர்களின் குறைகளை கேட்டறிவதற்காகவும் ஜனாதிபதி அநுரகுமார கண்டிக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அதன் போது புனித தந்த தாதுவைப் பார்வையிட வருகை தந்து கண்டியின் வீதிகளில் தங்கியிருந்த பொதுமக்கள் சிலரையும் ஜனாதிபதி சந்தித்து உரையாடியிருந்தார்.
