Home இலங்கை அரசியல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அநுர மத்தேகொட நியமனம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அநுர மத்தேகொட நியமனம்

0

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மத்தேகொட (Anura Meddegoda) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் தலைவராக பதவி வகித்த கௌசல்ய நவரத்ன (Kaushalya Nawaratne) செப்டம்பர் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகிய பின்னர் அந்தப் பதவி வெற்றிடமாக இருந்தது.

மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி கௌசல்ய நவரத்னவை பதவியிலிருந்து விலகுமாறு ஏகமனதாக தீர்மானித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கம்

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) முன்னாள் தலைவரான அநுர மத்தேகொட  40 வருடங்களுக்கும் மேலான சட்ட அனுபவமுள்ளவர்.

இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சரூக் (Razik Zarook) நியமிக்கப்பட்டுள்ளார்.

ராசிக் சரூக் இலங்கையின் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version