Home இலங்கை அரசியல் ஜப்பான் வெளிவிகார அமைச்சரை சந்தித்த அனுர!

ஜப்பான் வெளிவிகார அமைச்சரை சந்தித்த அனுர!

0

ஜப்பானுக்கு (Jappan) விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் (Anura Kumara Dissanayaka) ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் சுகே யொஷிபுமிக்கும் (TSUGE Yoshifumi) இடையே சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது.

குறித்த சந்திப்பானது, இன்று (22) ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது, இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக இருந்து வருகிற நட்புறவு தொடர்பாகவும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டதுடன் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும்,  தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் சுட்சுமி டாரோ  (Tsutsumi Taro), அப்பிரிவின் பிரதி பணிப்பாளர் இவாசே கிச்சிரோ (IWASE Kiichiro) உட்பட உத்தியோகத்தர்களும் தேசிய மக்கள் சக்தியின் ஜப்பான் குழுவின் உறுப்பினர்கள் சிலரும் இதன்போது கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version