தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) ஆதரவாக மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார கூட்டத்தில் அவர் கலந்துக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டம் (Mannar) நானாட்டான் பிரதேசத்தில் நேற்றையதினம் (09) குறித்த தேர்தல் பிரச்சார கூட்டம் மாலை 5
மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திடீர் சுகவீனம்
இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க திடீர் சுகவீனம் காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்
ரில்வின் சில்வா (Tilvin Silva) கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
மாத்தறை மக்கள் சந்திப்பு
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாத்தறை மொரவகவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் சுகவீனம் காரணமாக அநுர குமாரவிற்கு கலந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.
எனினும், ஓய்வின்றி ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டமையால் அநுர குமார திடீர் சுகவீனத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.