Home இலங்கை அரசியல் மின் கட்டண குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மின் கட்டண குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

0

அடுத்த சில வருடங்களில் மின் கட்டணத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வணிகச் சபை பிரதிநிதிகளுடன் இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வலுசக்தி சுயாதிகாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், புதிய மின்சார சட்டத்தை தயாரிக்கும் போது, வலுசக்தி சுயாதிகாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய சந்தை வாய்ப்புக்கள்

ஏற்றுமதி துறையை பலப்படுத்தல் மற்றும் சர்வதேச புதிய சந்தை வாய்ப்புக்களை தேடிக்கொள்வது தூதரக சேவையின் முக்கிய பணி என்ற வகையில் அதற்கான இயலுமைகளை கொண்டிருக்கும் திறமையானவர்களை தூதரக சேவைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஏற்றுமதி துறையை பலப்படுத்தல் மற்றும் சர்வதேச புதிய சந்தை வாய்ப்புக்களை தேடிக்கொள்வது தூதரக சேவையின் முக்கிய பணி என்ற வகையில் அதற்கான இயலுமைகளை கொண்டிருக்கும் திறமையானவர்களை தூதரக சேவைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version