Home இலங்கை அரசியல் வடக்கு மக்களின் சமூக பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

வடக்கு மக்களின் சமூக பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

0

வடக்கில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், நீர் வசதிகளை
மேம்படுத்துவதற்கும், வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும்
முயற்சிகள் நடந்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் தெற்காசியப் பிரிவின் தலைவர் மார்ட்டின் ரைசரை ஜனாதிபதி செயலகத்தில் இன்று(21.01.2025) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள், தூய்மையான இலங்கை திட்டம், கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு மற்றும்
டிஜிட்டல் உருமாற்றத் திட்டங்கள் என்பவவற்றுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப
ஆதரவை வழங்குவது குறித்து குறித்த கலந்துரையாடலின் போது ஒருமித்த கருத்து
எட்டப்பட்டுள்ளது.

நிதி உதவி

கல்வி, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கின் அபிவிருத்தி
என்பவற்றுக்கான புதிய திட்டங்களும் சாத்தியமான ஆதரவு விடயத்துக்காக
விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட நிதி உதவியை உலக வங்கி சரியான
நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யும் மார்ட்டின் ரைசர் உறுதியளித்துள்ளார்.
 

NO COMMENTS

Exit mobile version