Home இலங்கை அரசியல் அநுரகுமாரவா விஜேவீரவா துரோகி! ராஜித கேள்வி

அநுரகுமாரவா விஜேவீரவா துரோகி! ராஜித கேள்வி

0

ஜே.வி.பி.யின் தற்போதைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவா அல்லது ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீரவா துரோகி என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்த இருவரில் ஒருவர் துரோகியாகும் என அவர் இணைய ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க நேர்மையானவர் என்றால் விஜேவீர பெரிய பெய்யராகவோ அல்லது துரோகியாகவோ இருக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதும் போராட்டங்கள்

ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரொஹன விஜேவீர, இந்திய விரிவாக்கக் கொள்கை, 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாணசபை முறைமை என்பனவற்றை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்திவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க, திருகோணமலை எண்ணெய் குதம், சம்பூர் மின் திட்டம் போன்றவற்றை இந்தியாவிற்கு வழங்குகின்றார்.

இந்த இரண்டு பேரில் ஒருவர் மட்டுமே நேர்மையானவராக இருக்க வேண்டுமென ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version