Home இலங்கை அரசியல் ஒப்பந்தத்திற்கு முன்னரே கடன் செலுத்தலுக்கு நிதி ஒதுக்கிய அநுர தரப்பு

ஒப்பந்தத்திற்கு முன்னரே கடன் செலுத்தலுக்கு நிதி ஒதுக்கிய அநுர தரப்பு

0

சர்வதேச பிணைமுறி பத்திரங்களில் இருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் மோசடியானது என்று விமர்சித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னரே கடன் செலுத்தலுக்கு நிதி ஒதுக்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(05.12.2024) நடைபெற்ற அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் உரையாற்றுகையில்,   “தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தில் முறைமை மாற்றம் எதனையும் எதிர்பார்க்க முடியவில்லை. பாரம்பரிய விவசாய முறைமை தவறு என்றால் கூட்டு விவசாய முறைமைக்கு செல்ல வேண்டும்.

அரச கட்டமைப்பு

அதேபோல் கைத்தொழில் துறை தவறு என்றால் அரச கட்டமைப்புடனான கைத்தொழில் துறைக்கு செல்ல வேண்டும்.

ஜனாதிபதியின் கொள்கை உரையிலும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கையிலும் மாற்றம் ஏதும் கிடையாது.

பொருளாதார பிரதி அமைச்சர் இடைக்கால கணக்கறிக்கையை முன்வைத்தார். ஆனால் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுவதற்கான அவசியம் மற்றும் செலவு முகாமைத்துவம் பற்றி சபைக்கு தெளிவுப்படுத்தவில்லை.

அநுரவின் மாற்றம்

உண்மையில் சொல்வதாயின் முறைமை ஏதும் மாற்றமடையவில்லை. அநுரவே மாற்றமடைந்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டவர்கள் இன்று செயற்திட்டத்தின் உள்ளடக்கத்தை ஆராயாமலே செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிடுகிறார்கள்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version