தேசிய மக்கள் சக்தி அதிரடியான வாக்குறுதிகளை வழங்கினாலும் நடைமுறையில் அவர்களால் பல விடயங்களை நிறைவேற்ற முடியாத தன்மை தற்போது காணப்படுவதாக எதிர்கட்சி வட்டாரங்களில் இருந்து விசனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கை சட்டத்தின்படி புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதற்கோ அல்லது மாற்றம் செய்யவோ பெரும்பான்மை என்பது அவசியமாகிறது.
இதன்படி தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் மக்கள் ஆதரவும், அதி உயர் பெரும்பான்மையும் காணப்படுகிறது.
இருப்பினும் தேர்தல் மேடைகளில் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும், அதனை நடைமுறைப்படுத்தவும் பாரிய இடைவெளி காணப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் தற்போதைய ஆட்சி நடைமுறை தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரித்தானியாவின் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன், இராணுவ விவகாரங்களில் தலையிட முடியாது அநுர தரப்பு தருமாறுவதாக தெரிவித்தார்.
மேலும்,வல்லரசுகளின் கட்டுபாடுகளின் கீழ் இலங்கை தற்போது காணப்படுவதாகவும் கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,