ஜப்பானுக்கு (Japan) விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayaka), ஜப்பான்
அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான
சந்திப்பின் போது இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசோமாட்டா இந்த
அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்தார்.
விரிவான கலந்துரையாடல்கள்
புதிய அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்புக்கு, இதன்போது தூதர் பாராட்டு
தெரிவித்தார்.
ஜப்பான் அரசாங்கத்தால், அண்மையில் தொடங்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு
உதவித் திட்டத்தில் இலங்கையைச் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
ஜப்பான் தூதர் கூறினார்.
அதேவேளை, 30 ஆண்டுகால மோதலால் பாதிக்கப்பட்ட வடக்கு சமூகங்களிடையே தேசிய
நல்லிணக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கூட்டு ஜப்பான்
சுவிட்சர்லாந்து – தென்னாப்பிரிக்கா திட்டத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால
முயற்சிகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
கூடுதலாக, இலங்கையில் ஜப்பானிய முதலீடுகளின் தற்போதைய நிலை குறித்து இரண்டுத் தரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர்.
டிஜிட்டல் பொருளாதார மற்றும் விமான நிலைய முதலீடுகளின் தற்போதைய நிலை மற்றும்
முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
