Home இலங்கை அரசியல் ஜனாதிபதி அநுரவுக்கு மாலத்தீவில் அமோக வரவேற்பு

ஜனாதிபதி அநுரவுக்கு மாலத்தீவில் அமோக வரவேற்பு

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலத்தீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து இன்று
முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.

அங்கு மாலத்தீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில்
ஜனாதிபதியை அந்நாட்டு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு வரவேற்றுள்ளார்.

ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக மாலத்தீவு வெலானா சர்வதேச விமான நிலையத்தின்
விசேட விருந்தினர் வருகை முனையத்தில் சிறுமிகள் குழுவொன்று அழகிய கலாசார
நடனத்தை நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி அந்த சிறுமிகளுடன் சிறு உரையாடலிலும்
ஈடுபட்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் மாலைதீவு
ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு தலைமையில் மாலைதீவின் தலைநகரான மாலேயில் உள்ள
குடியரசு சதுக்கத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை
அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த அரச
விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version