Home இலங்கை அரசியல் தமிழ் கட்சிகளின் குழப்பத்தில் அநுரவின் உள்ளக நகர்வுகள்

தமிழ் கட்சிகளின் குழப்பத்தில் அநுரவின் உள்ளக நகர்வுகள்

0

இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) பதவியேற்ற பிறகு, குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைமைக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே. வி. பி.) அரசியல்வாதிகள் 13ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்மறையான கருத்துகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் தரப்பு அரசியல் தலைமைகளினால் இன்றுவரை 13ஆவது திருத்தம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக நீதி அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழர் தரப்பு அரசியலுக்கும் தெற்கு அரசியலுக்கும் இடையிலான சில கருத்து வேறுபாடுகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க “நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம், இதற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’’ என உறுதியளித்தார்.

எனினும்,  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவரும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்தின் எதிரொலிகள் தற்போதைய அரசியல் களத்தில் வாதபிரதிவாதங்களை எழுப்பியுள்ளன.

இந்நிலையில், அநுர அரசாங்கத்தின் நகர்வும், தமிழ் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடுகளும் எவ்வாறு அமையப்பெற்றுள்ளன என்பது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அரசியல் ஆய்வாளர்களான வேல் தம்ரா(பிரித்தானியா), மற்றும் நிலாந்தன் ஆகியோர் முன்வைக்கும் கருத்துக்களின் நேரலை இதோ…

NO COMMENTS

Exit mobile version