Home இலங்கை அரசியல் நெருக்கடி மிக்க காலத்தில் அநுரவின் புதிய பாய்ச்சல்..

நெருக்கடி மிக்க காலத்தில் அநுரவின் புதிய பாய்ச்சல்..

0

தேசிய மக்கள் சக்தியின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முதலாவது வரவுசெலவுத்திட்டத்தை பெரும் நெருக்கடிகள் மத்தியில் சமர்ப்பித்திருந்தது.

இந்தநிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுதிட்டத்தை பொறுத்தவரையில், நாடு முழுவதும் சீரான அளவிற்கு பார்க்குமளவிற்கு உள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டிலுள்ள பொருளாதார ஒழுங்கீனத்தை நிவர்த்தி செய்யுமளவிற்கு வரவு செலவு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தவினால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுதிட்டம் தான் இலங்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அப்போதைய சூழ்நிலை தற்போது இல்லை, எனவே அதனையும் கருதில்கொண்டு தான் வரவுசெலவுதிட்டம் மீதான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி… 

NO COMMENTS

Exit mobile version