Home இலங்கை அரசியல் ஜனாதிபதி அநுரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! புலனாய்வு பிரிவின் முக்கிய தகவல்

ஜனாதிபதி அநுரவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! புலனாய்வு பிரிவின் முக்கிய தகவல்

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல்வேறு மக்கள் சந்திப்புகளின் போது பொதுமக்கள் மத்தியில் கலந்து கொள்வது, அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அரச புலனாய்வு பிரிவு கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாதுகாப்பு தரப்பினரின் சந்தேகம் 

குறிப்பாக, நாட்டில் தற்போது காணப்படும் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதுடன், அவற்றுக்கு பின்னால் வேறு சக்திகள் உள்ளதா என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் சந்தேகத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், புலனாய்வு பிரிவு இந்த குற்றச் செயல்களின் பின்னணியில் உள்ளவர்களை தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும்போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கு மிக அருகிலேயே சென்று, நேரடியாக அவர்களுடன் கலந்துரையாடும் தன்மை கடந்த நாட்களில் கண்கூடாகக் காணப்பட்டது.

   

ஆனால், இந்த அணுகுமுறை ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்று சிலர் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ள போதிலும், பல தரப்பினரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய அவசியத்தை முன்வைத்துள்ளனர்.

இதனால், , ஜனாதிபதி மக்களுடன் நேரடியாக கலந்துகொள்வதை குறைக்க வேண்டும் என பாதுகாப்பு பிரிவினர் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

   

NO COMMENTS

Exit mobile version