Home இலங்கை அரசியல் இலங்கைக்குள் இந்திய உளவு அமைப்புக்களை தடுப்பதில் அநுரவின் புதிய வியூகம்

இலங்கைக்குள் இந்திய உளவு அமைப்புக்களை தடுப்பதில் அநுரவின் புதிய வியூகம்

0

இந்தியாவின் புலனாய்வுத் துறை அதிகளவில் இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற கருத்து கடந்த காலங்களில் பேசுபொருளாகியிருந்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைத்த சில நாட்களில் இந்த கருத்து பரவலாக பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியாவை மெல்ல மெல்ல அநுர அரசு ஓரங்கட்டுவது தெளிவாக தெரிகின்றது. உதாரணத்திற்கு அதானி விவகாரத்தை கூறலாம்.

அத்துடன், இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் ஆலோசிக்கப்பட்டிருந்தது.

குறித்த திட்டம் டுபாயை தலைமையகமாக கொண்ட இந்திய நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் இந்தத் திட்டத்தை முற்றாக நிறுத்தியிருந்தது.

தற்போது, இந்தத் திட்டம் பிரான்ஸ் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவை, இந்தியப் புலனாய்வுத் துறையின் தலையீட்டை முற்றாக நிறுத்தும் அரசாங்கத்தின் வியூகமாகும்.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version