Home இலங்கை அரசியல் சர்வதேசத்திற்கு தமிழர்கள் வழங்கிய தகவல்! ஐ.நாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

சர்வதேசத்திற்கு தமிழர்கள் வழங்கிய தகவல்! ஐ.நாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

0

தென்னிலங்கை அரசியல் கட்சிக்கு வடக்கு மாகாண மக்கள் வாக்களித்ததன் மூலம் சர்வதேசத்திற்கு வலுவான செய்தியொன்றை தமிழர்கள் வழங்கியுள்ளதாக பேராசிரியர் சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமிழர்களின் நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில், நாட்டின் 22 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றி பெற்றது.

சர்வதேச சமூகம்

கடந்த தேர்தல்களில் வடகிழக்கு மக்கள் தெற்கில் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கும் போக்கு இருக்கவில்லை. இதன் விளைவாகவே சர்வதேச சமூகம் இலங்கையை சமத்துவ பிரச்சனைகள் உள்ளமையை ஏற்றுக்கொண்டனர்.

கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெறவில்லை. எனினும் பொதுத் தேர்தலில் வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தி தமது வாக்குகளை வழங்கியமை, நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு சிறந்த உதாரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் 2025 பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இதன்போது பொது அரசியல் கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஜெனிவாவில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அடிப்படை பிரச்சினை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எவ்விதமான எதிர்பார்ப்பு மற்றும் நிபந்தனைகளின்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

ஆகவே தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி நாட்டின் சட்ட கட்டமைப்புக்குள் இருந்துக் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.

அத்துடன் நாட்டில் மனித உரிமையை மென்மேலும் வலுப்படுத்த பாராளுமன்ற பொறிமுறைக்குள் விசேட செயற்திட்டங்களை வகுக்க வேண்டும் என சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version