Home இலங்கை அரசியல் இனவாதத்தை பரப்புவோருக்கு எதிராக பாயவுள்ள கடும் சட்டங்கள் – யாழில் ஜனாதிபதி எச்சரிக்கை

இனவாதத்தை பரப்புவோருக்கு எதிராக பாயவுள்ள கடும் சட்டங்கள் – யாழில் ஜனாதிபதி எச்சரிக்கை

0

இனவாதத்தை பரப்புவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

யாழ். (Jaffna) வல்வெட்டித்துறை பிரதேசத்தில் நேற்று (31.1.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து இன மக்களினதும் கலாசாரம், பண்பாடுகள் மற்றும் விழுமியங்களைக் கொண்டாடும் வகையில் ஒக்டோபர் மாதத்தில் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி வேலைத்திட்டம்

இதேவேளை, யாழ்.மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் வகையில் நேற்று யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

வடக்கில் நிலவும் காணி பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு மக்களுக்கான காணிகளை மீள வழங்குவது துரிதப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்.மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், சட்டவிரோதமான முறையில் மதில் கட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில், சட்டவிரோதமான முறையில், ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறி அடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என்றும் அது எந்த விதத்திலும் இன நல்லிணக்கத்திற்கோ, மாற்றத்திற்கோ ஏற்றதல்ல எனவும் கஜேந்திரகுமார் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version