Home இலங்கை அரசியல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய அநுர

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய அநுர

0

இலங்கை, தமது விமானப்படை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இந்தியாவின் போர்
விமானமான தேஜாஸ் ஆமு1 ஐ வாங்க மறுத்துவிட்டதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி
வெளியிட்டுள்ளது.

சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இலங்கையும் இந்தியாவும் நல்ல உறவுகளைப்
பகிர்ந்து வருகின்றன.
அண்மைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி உட்பட பல்வேறு நெருக்கடி
சூழ்நிலைகளிலும் இந்தியா இலங்கைக்கு உதவியுள்ளது.

இருப்பினும், இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் பிராந்தியத்தில்
இந்தியாவின் நலன்களுக்கு எதிரான பல முடிவுகளை எடுத்து வருவதாக குறித்த இந்திய
ஊடகம் தெரிவித்துள்ளது.

போர் விமானக் குழு

இதன்படி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கமும், இந்தியாவை
அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கூறப்படும் ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறித்த
ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அதன் விமானப்படையை, மேம்படுத்தி வருகிறது, இதற்காக, இந்தியாவின் போர்
விமானமான தேஜாஸ் ஆமு1 ஐ வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

அதேநேரம் சீனாவும் துகு-17 போர் விமானத்தை வழங்குவதற்கு பேச்சுக்களை நடத்தி
வந்தது.

எனினும், அனைவரும் ஆச்சரியம் கொள்ளத்தக்க வகையில், ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், இந்தியா அல்லது சீனாவிலிருந்து புதிய
ஜெட் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு பதிலாக, அதன் தற்போதைய போர் விமானக்
குழுவைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.

ஐந்து இஸ்ரேலிய போர் விமானங்கள்

அனுபவம் இல்லாதவர்களுக்கு, இலங்கையில் ஏற்கனவே முகசை போர் விமானங்கள் என்ற
ஐந்து இஸ்ரேலிய போர் விமானங்கள் உள்ளன.

இப்போது அவற்றை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேம்படுத்தல்
செயல்முறைக்காக, அது இஸ்ரேலிய விண்வெளித் தொழில்களுடன் 49 மில்லியன் டொலர்கள்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version