Home இலங்கை அரசியல் சபதத்தை நிறைவேற்றத் தவறிய அநுர : விளாசும் சஜித்

சபதத்தை நிறைவேற்றத் தவறிய அநுர : விளாசும் சஜித்

0

பல்வேறு வரிகளை குறைப்பதாக ஜனாதிபதி தேர்தலின் போது சபதம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) அதனை செய்ய தவறியுள்ளதாக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) கொலனாவவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை

ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குறுதியளித்தபடி மக்களின் துன்பங்களைக் குறைக்கத் தவறிய தேசிய மக்கள் சக்திக்கு (NPP) பதிலாக ஐக்கிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை பொதுமக்கள் வழங்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையை கலந்துரையாடல் மூலம் திருத்தம் செய்வதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தேங்காய்களுக்கு வரிசை

“தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, தேங்காய்களுக்கு வரிசையும் உள்ளது. ஜனாதிபதி நாட்டை சிக்கலில் தள்ளியுள்ளார். 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார், அதற்கு இன்னும் நான்கு வருடங்கள் மட்டுமே உள்ளதாக சஜித் பிரேமதாச கூறினார்.

விரைவான பொருளாதார வளர்ச்சி

தற்போதைய பொருளாதார நிலைமையின் கீழ் இலங்கைக்கு கடனை திருப்பிச் செலுத்த முடியாது என சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, கடனைத் தீர்ப்பதற்கு விரைவான பொருளாதார வளர்ச்சி தேவை என்றார்.

கடனை திருப்பிச் செலுத்துவதற்கு, பெரும்பான்மையான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், இல்லையெனில், 2028 இல் இலங்கை திவாலாகிவிடும் என்றும் கூறினார். 

  

https://www.youtube.com/embed/RezDad5sbbM

NO COMMENTS

Exit mobile version