Home முக்கியச் செய்திகள் மகிந்தவிடம் முட்டி மோதி மூக்குடையப்போகும் அநுர

மகிந்தவிடம் முட்டி மோதி மூக்குடையப்போகும் அநுர

0

நல்லாட்சி அரசாங்கமும் மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa)பழிவாங்க முயற்சித்தே  மூக்குடைப்பட்டது. அதேபோல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும்  முயற்சிப்பதாக தெரிகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செய்தி தொடர்பாளர்
சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இரத்து தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், “முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி

அதில் நாம் நோக்கும் கருத்து என்னவென்றால், முன்னாள் ஜனாதிபதிகளான ரணில்,கோட்டாபய,மைத்திரிபால,சந்திரிக்கா ஆகியோரை பழிவாங்குவதற்கல்ல.மகிந்த ராஜபக்சவை கொழும்பிலிருந்து மெதமுலனவிற்கு அனுப்புவதற்காகும்.

சர்வதேசத்தில் நற்பெயரை சம்பாதித்து வைத்துள்ள மகிந்த ராஜபக்சவை இந்நாட்டுக்கு வரும் இராஜதந்திரிகள் சந்திப்பதை தடுக்கும் நோக்கிலான சட்டமூலமாகவே தென்படுகிறது.

மக்களின் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்க வேண்டியுள்ள நிலையில் இவ்வாறான  செயற்பாடுகள் தேவையற்றது.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் இரத்துச் செய்ய முடியாது.

ஏனென்றால் இந்த சட்டத்திருத்தம் எதிர்காலத்தில் ஓய்வு பெறப்போகும் ஜனாதிபதி அநுரவுக்கே பொருந்தும். இறந்த காலத்திற்கு பொருந்தாது என்றார்.

NO COMMENTS

Exit mobile version