Home இலங்கை அரசியல் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் : வெளியான அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் : வெளியான அறிவிப்பு

0

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) பாதீடு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாதீட்டுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம்

இதனிடையே, பாதீட்டுத் திட்டத்தைத் தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற செயலாளருக்கு நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் எம்.எம்.சி.பி மொஹொட்டிகெதர கடிதம் எழுதியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பாதீட்டுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

NO COMMENTS

Exit mobile version