Home இந்தியா த.வெ.க. தொண்டர்களால் அதிர்ந்த மதுரை – உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்

த.வெ.க. தொண்டர்களால் அதிர்ந்த மதுரை – உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்

0

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் அரசியல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

இந்த சூழலில், த.வெ.க. (தமிழக வெற்றி கழகம்) தனது இரண்டாவது மாநில மாநாட்டை “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் மதுரையில் இன்று (ஆகஸ்ட் 21, 2025) நடத்துகிறது.

மதுரையின் புறநகர் பகுதியான பாரபத்தியில் சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் வியூகம்

மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இம்மாநாட்டில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பங்கேற்பாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களின் வசதிக்காக ‘பிங்க் ரூம்’ என்ற சிறப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டு திடல் முழுவதும் கட்சிக் கொடிகள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. 

பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் கட்சியின் எதிர்கால திட்டங்கள், தேர்தல் வியூகங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

NO COMMENTS

Exit mobile version