Home இலங்கை அரசியல் அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி தலைவராக மாறுவார் : ரணிலின் நம்பிக்கை

அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி தலைவராக மாறுவார் : ரணிலின் நம்பிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விஞ்சி அதிக வாக்குகளை பெறுவார்.

இதன் மூலம் இந்த வருட இறுதியில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இருமுனைப் போட்டி 

மகியங்கனையில் நடைபெற்ற பேரணியொன்றில் உரையாற்றிய விக்ரமசிங்க, தனது முன்னாள் அரசியல் நண்பர், எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் தனது கடமைகளில் தவறிவிட்டார்.

எனவே பிரதான எதிர்க்கட்சி தலைவர் நிலைப்பாட்டை அவரால் தக்க வைக்கமுடியாது போகும் என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில், தமது கட்சி பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது.
அத்துடன் கடந்த காலத்தில் தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற இருமுனைப் போட்டி மாத்திரமே இருந்தது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் அனுர சஜித்தை வெற்றி கொண்டு எதிர்க்கட்சி தலைவராவார் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version