Home இலங்கை சமூகம் வைத்தியரின் புகைப்படங்களை கைப்பற்றியிருந்த குற்றவாளி: வெளிவரும் அதிர்ச்சிகர தகவல்கள்

வைத்தியரின் புகைப்படங்களை கைப்பற்றியிருந்த குற்றவாளி: வெளிவரும் அதிர்ச்சிகர தகவல்கள்

0

அநுராதபுர போதனா வைத்தியசாலையின் விடுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, பெண் வைத்தியர் ஒருவரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகபர் குறித்த பல தகவல் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணையின் போது கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அநுராதபுரம் மற்றும் கல்னேவ காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் அநுராதபுரம் சிறப்பு அதிரடிப் படையினரால் கல்னேவ காவல் பிரிவில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதனனை தொடர்ந்து, சந்தேக நபர் கல்னேவ, எல வீதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சந்தேக நபர் மற்றைய காவல் பிரிவுகளில் செய்த குற்றங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருவதால், மேலதிக விசாரணைக்காக அது அநுராதபுரம் தலைமையக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறாதொரு பின்னணியில், சந்தேகபர் பெண் வைத்தியரின் தொலைபேசியை வலுக்கட்டாயமாக எடுத்து, மிரட்டி, அதன் கடவுச்சொல்லைப் பெற்று பின்னர் அதே தொலைபேசியிலிருந்து அவரது புகைப்படங்களை எடுத்துள்ளது தெரியவந்துள்ளளது.

அதன்போது, சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும், இது குறித்து யாரிடமாவது சொன்னால், அவரது புகைப்படங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என வைத்தியரை மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விரிவான விபரங்கள் ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில்…..

https://www.youtube.com/embed/PHgAEgxpiqU

NO COMMENTS

Exit mobile version