Home இலங்கை அரசியல் கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கை! குற்றச்சாட்டுகளை மறுக்கும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்

கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கை! குற்றச்சாட்டுகளை மறுக்கும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்

0

நுவர வெவ பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் உள்ள கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கை,
தமது காணி அந்த ஒதுக்கீட்டுப் பகுதிக்குள் வருவதால் நிறுத்தப்பட்டது என்ற
குற்றச்சாட்டுகளைத் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் அனுராதபுரம் மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் பி.டி.என்.கே. பலிஹேன திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் “முற்றிலும் பொய்யானது” என்றும், அரசியல் உள்நோக்கம்
கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டுகள்

தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் தமது காணியை விட்டு வெளியேறத் தயாராக
இருப்பதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தைக் களங்கப்படுத்த
மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும் அவர் விபரித்தார்.

தாம் வைத்திருக்கும் காணி சட்டப்பூர்வமாகப் பெறப்பட்டதாகவும், சந்திரிகா
குமாரதுங்க அரசாங்கத்தின் போது உத்தியோகபூர்வ பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும்,
கட்டுமானத் திட்டங்கள் உள்ளூராட்சி சபையால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர்
தெரிவித்தார்.

நீர்ப்பாசனத் திணைக்களம் அண்மைய மாதங்களாக நுவர வெவ பாதுகாக்கப்பட்ட பகுதியின்
எல்லைகளை வரையறுத்து வருகின்றது.

மேலதிக நடவடிக்கை 

இருப்பினும், அரசாங்கத்தின் முடிவு எடுக்கப்படும் வரை ஏற்கனவே உள்ள
கட்டமைப்புகள் மீது மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகள்
அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் பலிஹேனவின் காணி புதிதாக அடையாளம்
காணப்பட்ட ஒதுக்கீட்டுப் பகுதிக்குள் வருவதால் இருக்கலாம் என்று கவலைகள்
எழுப்பப்பட்டாலும், அவர் இதனை மறுத்தார்.

மேலும் பல காணிகளும் இவ்வாறு எல்லை நிர்ணயிக்கப்பட்ட பகுதிக்குள் வருவதாகவும்,
தாம் எந்தவிதமான செல்வாக்கையும் செலுத்தவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

NO COMMENTS

Exit mobile version