தாம், அடுத்த அதிகாரப்பூர்வ விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு புறப்பட
உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஏற்கனவே அதிகாரப்பூர்வ அழைப்பு
வந்துள்ளதாக ஜனாதிபதி களுத்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது
கூறியுள்ளார்.
[AKGZF7W
]
இலங்கைக்கு நன்மை
இந்த விஜயத்தின்போது இலங்கைக்கு நன்மை பயக்கும் அரசாங்க-அரசாங்க ஒப்பந்தத்தின்
மூலம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராயும்
என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஏற்கனவே அனுரகுமார திசாநாயக்கவின் இந்திய மற்றும் சீன விஜயங்கள்
வெற்றியளித்துள்ளதாக கூறப்படும் நிலையிலேயே இந்த தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.