Home சினிமா கைதி 2ல் கார்த்தியுடன் அனுஷ்கா நடிக்கிறாரா.. உண்மை இதுதான்

கைதி 2ல் கார்த்தியுடன் அனுஷ்கா நடிக்கிறாரா.. உண்மை இதுதான்

0

லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை முடித்துவிட்டு விரைவில் கைதி இரண்டாம் பாகத்தை தொடங்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

அது மட்டுமின்றி லோகேஷ் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்கப் போகிறார் எனவும் கூறப்பட்டு வருகிறது. அந்த படத்தை முடித்துவிட்டு தான் அவர் கைதி இரண்டாம் பாகத்தில் பணியாற்ற தொடங்குவாரா, அல்லது இரண்டிலும் ஒரே நேரத்தில் பணியாற்றுவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கைதி 2 படத்தின் கதை டில்லி மற்றும் ரோலக்ஸ் இடையே நடக்கும் மோதல் பற்றியது தான் எனவும் கூறப்பிடுகிறது. மேலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் சமீபத்தில் தகவல் பரவியது.

உண்மை இல்லை

இந்நிலையில் தற்போது அனுஷ்கா பற்றி பரவிய செய்தி உண்மை இல்லை என விளக்கம் கொடுத்திருக்கின்றனர். அனுஷ்கா தெலுங்கில் தற்போது காட்டி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

அடுத்து கைதி 2 படத்தில் நடிக்க அவர் பேச்சு வார்த்தையில் இருக்கிறார் என்ற செய்தி உண்மை இல்லை என அவர் தரப்பு கூறி இருக்கிறது.
 

NO COMMENTS

Exit mobile version