Home இலங்கை பொருளாதாரம் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பம்: வெளியாகியுள்ள அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பம்: வெளியாகியுள்ள அறிவிப்பு

0

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

குறித்த குடும்பங்களின் விண்ணப்பங்கள் ஏற்கனவே அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் விண்ணப்பிக்க டிசம்பர் 09 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

​​அஸ்வெசும திட்டம்

இதன்போது, ​​அஸ்வெசும திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத குடும்பங்கள் மட்டுமே குறித்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்களும் மீண்டும் அஸ்வெசும திட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிரதேச செயலகங்களுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குடும்பமாக விண்ணப்பிக்கும் போது அனைத்து உறுப்பினர்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதுமானது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version