Home இலங்கை சமூகம் 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்த ஜனாதிபதி

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்த ஜனாதிபதி

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிகளின் பட்டியல் 

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

  1. எஸ்.எஸ்.கே. விதான
  2. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க
  3. ஏ.எம்.எம். ரியால்
  4. டீ.பீ. முதுங்கொடுவ
  5. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத்
  6. ஜே. கஜனிதீபாலன்
  7. டி.எம்.டி.சி. பண்டார
  8. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன
  9. டி.எம்.ஏ. செனவிரத்ன
  10. ஏ.ஏ. ஆனந்தராஜா
  11. ஜி.என். பெரேரா
  12. ஏ. ஜுடேசன்
  13. டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க
  14. ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய
  15. செல்வி கே.டி.என்.வி. லங்காபுர
  16. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க
  17. எம்.ஐ.எம். ரிஸ்வி
  18. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா

NO COMMENTS

Exit mobile version