Home இலங்கை கல்வி மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக புதியவர் நியமனம்

மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக புதியவர் நியமனம்

0

வடமாகாண கல்வி பணிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருக்கும் தி.ஜோண் குயின்ரஸ்
மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பதவி
உயர்தப்பட்டுள்ளார்.

குறித்த நியமனமானது இன்று(05.07.2024) முதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்வி நிர்வாக சேவை

1986ம் ஆண்டு அரச சேவையில் ஆசிரியராக இணைந்து அதிபராக, ஆசிரிய கலாசாலை
விரிவுரையாளராக, உதவிக் கல்விப் பணிப்பாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, 4
வலயங்களின் வலயக் கல்வி பணிப்பாளராக, மேலதிக மாகாண கல்வி பணிப்பாளராக
பணியாற்றியிருந்த நிலையில் தற்போது மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றி
வருகின்ற நிலையில் இவருக்கு இவ் அதி உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 01.01.2024 முதல் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு
தேசிய பொதுச் சேவை ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version