Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சுகளுக்கு கண்காணிப்புக் குழுக்கள் நியமனம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சுகளுக்கு கண்காணிப்புக் குழுக்கள் நியமனம்

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சகல அமைச்சுக்களுக்கும் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி)யின் மூத்த மற்றும் முக்கிய உறுப்பினர்களே இவ்வாறு கண்காணிப்புக் குழு உறுப்பினர்களாக அமைச்சுக்களுக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர்.

பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அமைச்சுக்களிலும் குறைந்த பட்சம் ஐந்து பேர் கொண்ட கண்காணிப்புக் குழு நியமிக்கப்படவுள்ளது.

கண்காணிப்புக் குழு

அமைச்சருக்கு நிகரான தீர்மானமெடுக்கும் அதிகாரத்துடன் அந்தந்த அமைச்சர்களை வழிநடத்தும் பொறுப்பும் குறித்த கண்காணிப்புக் குழுக்களின் பொறுப்பில் விடப்படவுள்ளது.

குறித்த கண்காணிப்புக்குழுக்களுக்குப் பொருத்தமான நபர்களை தெரிவு செய்யும் பணிகளை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தற்போதைய நாட்களில் முன்னெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version