Home இலங்கை அரசியல் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு

0

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நியமிப்பது ஒரு சிக்கலான செயல் என்றும், அதற்கு நியாயமான கால அவகாசம் தேவை என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பல தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கான அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல அலுவலகங்களில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

நியமனம்

இதேவேளை, அரசியலமைப்பின் பிரகாரம், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர் அல்லது உயர்ஸ்தானிகர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கும் போது, அந்த நியமனத்திற்கு அந்த நாட்டின் சம்மதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version