Home இலங்கை கல்வி பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை நியமிக்க அரசாங்கம் அனுமதி

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை நியமிக்க அரசாங்கம் அனுமதி

0

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை நியமிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள்

புதிய விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

இதன்போது தற்போதுள்ள வெற்றிடங்களுக்காக, 50வீத விரிவுரையாளர்களை பணியமர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர், பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதால், அரச பல்கலைக்கழகங்களில் இந்த வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் புதிதாக நிறுவப்பட்ட மருத்துவ பீடங்களுக்கும் விரிவுரையாளர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version